×

ஓசூர் பகுதியில் புதினா விளைச்சல் அமோகம்

ஓசூர்: ஓசூர் பகுதியில் புதினா விளைச்சல் அதிகரிப்பால் விலை சரிந்துள்ளதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி ஆகிய தாலுகாவில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இங்கு மண் வளம் நல்ல ஈரப்பதத்துடன் காணப்படுவதால் காய்கறிகள், கீரை வகைகள், கொய்மலர்கள் பயிரிடப்பட்டு வருகிறது. ரோஜா, ஜெர்பரா, பட்டன்ரோஸ் மற்றும் செண்டுமல்லி, சாமந்தி மற்றும் கேரட், முள்ளங்கி, தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓசூர்,தேன்கனிக்கோட்டை, சூளகிரி உள்ளிட்ட பகுதியில் கடந்த சில மாத்திற்கு முன், 2 ஆயிரம் ஏக்கர் பரப்பில் புதினா பயிரிடப்பட்டுள்ளது.

தற்போது அனைத்து பகுதிகளில் புதினா செழித்து வளர்ந்து பறிப்பிற்கு  தயாராக உள்ளது. பறிப்பிற்கு பின் கோவை, திருச்சி, சென்னை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மற்றும் ஆந்திரா,கேரளா, கர்நாடகவுக்கு வி்ற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். விவசாயிகள் கூறுகையில், புதினா பயிரிட ஏக்கருக்கு ரூ25 ஆயிரம் செலவு ஆகிறது. விளைச்சல் 90 நாட்களுக்குள் வரக்கூடியதாகும். புதினா ஒரு முறை பயிரிட்டால் 3 வருடங்கள் தொடர்ந்து இருக்கும். தற்போது ஒரு கட்டு ரூ5 க்கு விற்பனையாகிறது. இது கடந்த மாதத்தை விட விலை மிகவும் குறைவாக உள்ளது. தற்போது நல்ல விளைச்லை கொடுத்துள்ள நிலையில் விலை சரிந்துள்ளது. என்றனர்.

Tags : Hosur Hosur , Hosur, Mint
× RELATED ஓசூரில் அதிமுக வேட்பாளர் அறிமுக...