×

தேர்தல் கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மிக்கு வெற்றி வாய்ப்பு

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வரும் 8ம் தேதி வாக்குபதிவு நடைபெறவுள்ளது. 11ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், நடப்பு தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதில் மீண்டும் ஆம் ஆத்மி கட்சியே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபி-எஸ்ஓஎஸ் என்கிற நிறுவனம் எடுத்துள்ள அந்த கருத்து கணிப்பில், 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கட்சி 54 முதல் 60 தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜ, 10 முதல் 14 இடங்களை மட்டுமே பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியில் ஆட்சி செய்த காங்கிரசின் நிலைமை பரிதாபகரமான நிலையில் உள்ளது. அக்கட்சி அதிகபட்சம் 2 தொகுதிகளை பெறும் என தெரியவந்துள்ளது.

Tags : victory ,AAP ,Delhi , AAP wins victory,delhi polls
× RELATED உழைப்பு, விடா முயற்சி இருந்தால் வெற்றிக்கனி நம் கைகளில் தவழும்