×

உள்ளாட்சித்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை மாற்றியமைக்க குழு

சென்னை : உள்ளாட்சி துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மாற்றியமைக்க குழு அமைத்து தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு 1948ம் இயற்றிய குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின்படி பல்வேறு தொழில்களுக்கு காலத்திற்கு ஏற்ற வகையில் குறைந்தபட்ச ஊதியம் மாற்றியமைக்கப்படுகிறது. தமிழகத்தில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறைந்த ஊதியம் மறு நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மறு நிர்ணயம் செய்வது தொடர்பான குழுவை அமைத்து தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.  இந்த குழுவின் தலைவராக தொழிலாளர் துறை இணை ஆணையர், தலைவராகவும், 3வது செயலாக்க பிரிவு உதவி ஆணையர் செயலாளராகவும், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை உதவி இயக்குநர் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அண்ணா தொழிற்சங்க பேரவையைத் சேர்ந்த ராசு, இந்திய தொழிற்சங்க மையத்தைச் சேர்ந்த கே.ஆர்.கணேசன், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசை சேர்ந்த ஜெயசந்திரன் ஆகியோர் தொழிலார்களின் பிரநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். நகராட்சி நிர்வாக இணை இயக்குனர் தனலட்சுமி, ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் ராஜ, சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை துணை ஆணையர் மதுசுதன் ரெட்டி ஆகியோர் வேலையளிப்பவர்களின் தரப்பு பிரநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் பயிற்சி பெறதாவர்கள், ஓரளவு பயிற்சி பெற்றவர்கள் (இரண்டு நிலை), பயிற்சி பெற்றவர்கள் (இரண்டு நிலை) ஆகிய மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஊதியம் நிர்ணயம் செய்யப்படவுள்ளது. பயிற்சி பெறாதவர்கள் பட்டியலில் பெருக்குபவர்கள், தோட்டக்காரர், மின்கம்பியாள் உதவியாளர், முரசு கொட்டுபவர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 22 தொழில்கள் இடம்பெற்றள்ளன. ஓரளவு பயிற்சி பெற்றவர்கள் பட்டியலில் நோய் கட்டுப்பாட்டு மேலாள், குழாய்த் தொடர் பொருத்துபவர், விளையாட்டு மைதானப் பணியாளர், உதவி பொருத்துநர், மேல் நிலைத் தொட்டி இயக்குபவர், பம்பு இயக்குபவர் உள்ளிட்ட 27 தொழில்கள் இடம் பெற்றுள்ளன. பயிற்சி பெற்றவர்கள் பட்டியலில் இயந்திர கம்பியர்கள், கொத்தனார், கணினி இயக்குபவர், ஊராட்சி செயலாளர் மற்றும் கணினி உள்ளிட்ட 10 தொழில்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த குழுவான பட்டாசு தயாரிப்புத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய வீதங்களை திருத்தியமைப்பது தொடர்பாக, விசாரணைகள் நடத்துவதற்கும், மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கும். இதனைத் தொடர்ந்து வரைவு ஊதியங்கள் வெளியிடப்பட்டு பொதுமக்கள் கருத்து கேட்கப்படும். இதனைத் தொடர்ந்து இறுதி ஊதியம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்.

Tags : Committee ,servants , Committee to change, minimum wage , civil servants...
× RELATED காணொலி கண்காணிப்பு குழுவால் ஒப்புதல்...