×

‘நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட தாமதம் ஏன்?’

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை:நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக தூக்கிலிட்டால் தான் இனிமேலும் இது போன்ற கொடூரச்செயல் நடைபெறாமல் இருக்க ஏதுவாக இருக்கும். இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனையை நிறைவேற்றுவதற்கு தடை கோரி மனு தாக்கல் செய்ததும், மறு உத்தரவு வரும் வரை காத்திருப்பதும், கருணை மனு அளித்ததும் குற்றவாளிகளுக்கு மட்டுமல்ல குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கும் அச்சம் இல்லாத நிலையை ஏற்படுத்தும். எனவே குற்றத்துக்கு உரிய தண்டனையானது காலத்தே கிடைத்தால் தான் குற்றங்கள் குறையும். அதுவும் நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை கைதிகள் தொடர்ந்து ஏதேதோ சாக்கு போக்குகளை சொல்லி வழக்கில் இருந்து தப்பிக்கவோ எடுக்கும் முயற்சிகளை இனியும் நீதிமன்றம் அனுமதிக்கக்கூடாது.

Tags : execution , Nirbhaya ,delayed execution of accused?
× RELATED திருச்சியில் நடைபெற்று வரும்...