×

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு பிப்.25ம் தேதி வரை தடை நீட்டிப்பு : உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் அப்பாவும், அதிமுக சார்பில் ஐ.எஸ். இன்பதுரையும் போட்டியிட்டனர். இதில், அதிமுக சார்பில் போட்டியிட்ட இன்பதுரை 69 ஆயிரத்து 590 வாக்குகளையும் திமுக சார்பில் போட்டியிட்ட எம்.அப்பாவு 69 ஆயிரத்து 541 வாக்குகளையும் பெற்றனர். 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இன்பதுரை வெற்றியை எதிர்த்து தி.மு.க வேட்பாளர் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கடைசி மூன்று சுற்று வாக்குகள் மற்றும் தபால் வாக்குகளை தாக்கல் செய்ய தெரிவித்ததோடு, அவற்றை தற்போது எண்ணியும் முடித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக அதிமுகவின் இன்பதுரை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து நடந்த விசாரணை அனைத்தும் அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்டதால் தடை நீடித்து வருகிறது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி அருண்மிஸ்ரா பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கை இன்று விசாரிக்க போவதில்லை எனக்கூறி வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனால் தற்போது உள்ள தடை என்பது அடுத்த விசாரணை வரை நீடிக்கும் என தெரியவந்துள்ளது.

Tags : Radhapuram , Radhapuram remand case ,extended till February 25
× RELATED தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர்...