×

45 மணி நேரத்திற்கு பின் காஸ் கசிவு நிறுத்தம்

திருமலை ஆந்திராவில் விவசாய நில பைப்லைனில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக ஏற்பட்ட காஸ் கசிவு, 45 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ரசாயனம், களிமண் கலந்த தண்ணீர் மூலம் நிறுத்தினர். ஆந்திராவின் உப்பிடி கிராமத்தில் உள்ள விவசாய நில பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 2ம் தேதி பலத்த சத்தத்துடன் காஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் மும்பையில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவன நிபுணர்கள் நேற்று முன்தினம் வரவழைக்கப்பட்டு காஸ் கசிவை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நேற்று 3வது நாளாக ஓஎன்ஜிசி குழும பொதுமேலாளர் அதேஷ்குமார் தலைமையில், ரசாயனம் மற்றும் களிமண்  கலந்த 80 ஆயிரம்  லிட்டர் தண்ணீரை காஸ் கசிவு ஏற்படும் பைப் வழியாக அனுப்பி, காஸ் அழுத்தத்தை குறைத்து, பின்னர் அதனை மூடும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து, சுமார் 45 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் நேற்று காஸ் கசிவு நிறுத்தப்பட்டது. கடந்த 2 நாட்களாக பீதியில் இருந்த பொதுமக்கள் காஸ் கசிவு நிறுத்தப்பட்டதை அறிந்து நிம்மதியடைந்தனர்.


Tags : Gas leak stop , Gas leak
× RELATED போராட்டங்கள் நடத்தியபோதும் தடையை...