×

பாஜ.வில் சேர்ந்தார் திவேதி மகன்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ஜனார்த்தன் திவேதியின் மகன் சமிர் திவேதி, பாஜ பொது செயலாளர் அருண் சிங் முன்னிலையில் நேற்று பாஜ.வில் இணைந்தார். இது தொடர்பாக பேசிய அவர், ``முதல் முறையாக அரசியல் கட்சியில் இணைகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளினால் மிகவும் கவரப்பட்டதால், பாஜ.வில் சேர முடிவெடுத்தேன்,’’ என்று கூறினார். முன்னதாக, ஜனார்த்தன் திவேதி டெல்லியில் கடந்தாண்டு டிசம்பரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Dwivedi ,BJP , BJP, son of Dwivedi
× RELATED கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர்...