×

ஏர் இந்தியாவை வாங்கும் முயற்சியில் டாடா நிறுவனம்

மும்பை: ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிறுவனத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து வாங்க பிரபல தொழில் குழுமம் டாடா நிறுவனம் முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஏர் இந்தியா விமான நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால் பெரும் கடன் சுமை ஏற்பட்டு முடங்கும் நிலைக்கு சென்றுவிட்டது. இதனால், இந்த நிறுவனத்தை முழுவதுமாக விற்பது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணியை ஏற்கனவே மத்திய அரசு தொடங்கிவிட்டது. இந்நிலையில், இந்த நிறுவனத்தை மலேசிய தொழிலதிபர் டோனி பெர்னாண்டஸுடன் கூட்டு சேர்ந்து வாங்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஏர் ஆசியா இந்தியா விமான நிறுவனத்தில் 49 சதவீத பங்குகளை வைத்துள்ள டோனி பெர்ணான்டஸுடன் இதற்கான பேச்சுவார்த்தையை டாடா நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. ஏர் ஆசியா இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்களை இணைத்து இயக்கலாம் என்று டாடா நிறுவனம் யோசனை கூறியுள்ளது.


Tags : Tata ,Air India ,Tata Institute , Air India, Tata Company
× RELATED கட்டிப்பிடி, கைகுலுக்கலுக்கு நடிகர், நடிகைகள் டாட்டா