×

மலேசியாவுக்கு பாக். ஆதரவுக்கரம்: இந்தியா வாங்கலைன்னா என்ன? பாமாயிலை நாங்க வாங்குறோம்

* உலகிலேயே அதிகளவு பாமாயில் உற்பத்தி செய்யும் நாடுகள் இந்தோனேஷியா, மலேசியா.
*  உலகிலேயே இந்தியா தான் அதிகளவு பாமாயிலை இறக்குமதி செய்கிறது. இது, ஆண்டுக்கு கிட்டத்தட்ட 1.5 கோடி டன்னாகும்.
*  கடந்த ஆண்டு மலேசியாவிடமிருந்து இந்தியா 44 லட்சம் டன்னும், பாகிஸ்தான் 10.8 லட்சம் டன்னும் பாமாயிலை வாங்கி உள்ளன.

கோலாலம்பூர்: மலேசியா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியாவுக்கு ஈடாக மலேசிய பாமாயிலை வாங்க நடவடிக்கை எடுப்பதாகவும், காஷ்மீர் விவகாரத்தில் மலேசியாவை இந்தியா மிரட்டி இருப்பதாகவும் கூறியிருக்கிறார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக மலேசிய பிரதமர் மகாதீர், மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார். இதற்கு பதிலடியாக, மலேசியாவிடம் இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை இந்தியா வெகுவாக குறைக்க நடவடிக்கை எடுத்தது.  இதனால் மலேசியா கலங்கி போனது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 2 நாள் அரசு முறை பயணமாக மலேசியா சென்றுள்ளார். கோலாலம்பூரில் அவர் நேற்று மலேசிய பிரதமர் மகாதீரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் பின் இரு தலைவர்களும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது பேசிய இம்ரான் கான் கூறியதாவது: காஷ்மீர் விவகாரத்தில் எங்களுக்கு ஆதரவாக பேசியதற்காக மலேசியாவை மிரட்டும் வகையில் இந்தியா, பாமாயில் இறக்குமதியை குறைத்துக் கொண்டுள்ளது.  பாமாயில் வாங்குவதை இந்தியா குறைத்தால், அதை ஈடுகட்ட பாகிஸ்தான் முடிந்தளவு முயற்சிக்கும். வழக்கத்தை விட அதிகளவில் பாமாயில் இறக்குமதி செய்ய பாகிஸ்தான் தயாராக இருக்கிறது என்றார். மேலும், சமீபத்தில் கோலாலம்பூரில் நடந்த இஸ்லாமிய உச்சி மாநாட்டில் பங்கேற்க இயலாமல் போனதற்காக வருந்துவதாகவும் இம்ரான் கான் குறிப்பிட்டார்.


Tags : Malaysia ,India , Malaysia, Pakistan, India, Palm Oil
× RELATED மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது...