×

சென்ட்ரலில் இருந்து ஷிமோகாவிற்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை : சென்ட்ரலில் இருந்து கர்நாடகாவின் ஷிமோகாவிற்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை : சென்னை சென்ட்ரலில் இருந்து கர்நாடகாவின் ஷிமோகாவிற்கு வாராந்திர சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளது. சென்ட்ரலில் இருந்து பிப். 18, 25 மற்றும் மார்ச் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் மதியம் 3 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் அதிகாலை 3.55 மணிக்கு ஷிமோகா சென்றடையும்.

ஷிமோகாவிலிருந்து பிப். 17, 24 மற்றும் மார்ச் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் இரவு 11.55 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் பகல் 11.15 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Southern Railway ,Central ,Shimoga ,announcement , Central, Special Railway, Southern Railway
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு...