×

வீட்டைவிட்டு கணவன் விரட்டியடிப்பதாக கூறி போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி: போலீசார் பாதுகாப்பாக மீட்டனர்

சென்னை: இன்ஸ்பெக்டரின் துணையுடன் கணவர் தன்னை வீட்டைவிட்டு விரட்டியப்பதாக கூறி, இளம்பெண் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு, உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்தால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ேநற்று மதியம் இளம்பெண் ஒருவர் புகார் அளிக்க வந்தார். அப்போது கமிஷனர் அலுவலகத்தின் 3வது நுழைவாயில் முன்பு வந்த அவர், திடீரென கையில் பாட்டிலில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றிக்கொண்டு  தீக்குளிக்க முயன்றார். அங்கு, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து செயல்பட்டு, அந்த இளம்பெண் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். விசாரணையில் அவர் அனகாபுத்தூர் காமராஜபுரத்தை சேர்ந்த மேரி மெர்சி என்பது தெரியவந்தது. அவரை வேப்பேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அப்போது, மேரி மெர்சி போலீசாரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி சகாய பிரவீன் என்பவருடன் எனக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு கணவர் மற்றும் அவரது தந்தை வர்கீஸ், தயார் புஷ்பலதா, மாமியாரின் சகோதரி சுதா ஆகியோர் என்னை வன்கொடுமை செய்தும், அடித்தும் கருவை கலைத்தும் கொடுமைப்படுத்தினர்.  இதுகுறித்து நான் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் புகாரின் பேரில், போலீசார் நடவடிக்கை எடுக்காமல், கணவர் சகாய பிரவீனுடன் சேர்ந்து போலீசாரும் என்னை மிரட்டினர். இதுதொடர்பாக நான் பரங்கிமலை துணை கமிஷனரிடம் புகார் அளித்தேன். எனது மாமனார் செல்வாக்கால் எனக்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை.

இதற்கிடையை சங்கர் நகர் இன்ஸ்பெக்டர் விசாரணைக்கு என்னை அழைத்தார். அதன்படி நான் காவல் நிலையத்திற்கு சென்றபோது ‘மரியாதையாக வீட்டு சாவியை கொடுத்துவிட்டு எங்கயாவது ஓடிவிடு’ என்று மிரட்டினார். அவரது மிரட்டலுக்கு பயந்து நான் எனது தாயார் வீட்டிற்கு ெசன்றேன். அங்கு எனது கணவருடன் இன்ஸ்பெக்டர் வந்து மிரட்டுகிறார். என்னை வலுக்கட்டாயமாக வீட்டை விட்டு வெளியேற்ற நினைக்கும் கணவர், அவரது குடும்பத்தினர் மற்றும் சங்கர் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.

Tags : police commissioner ,office ,home ,police officer , Husband, young, trying to fire, cops
× RELATED ஆதரவற்றோரை மீட்டு மறுவாழ்வு