×

எளாவூர் சோதனை சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட 17 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் அழிப்பு: போலீசார் நடவடிக்கை

சென்னை: எளாவூர் சோதனை சாவடியில் கடந்த ஜூலை மாதம் பறிமுதல் செய்த 17 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை தீவைத்து அழித்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடி வழியாக தினந்தோறும் ஆந்திரா, புதுடெல்லி, பீகார், ஒரிசா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தேவையான உதிரிபாகங்கள். காய்கறிகள் உள்பட பல்வேறு பொருட்களை கனரக வாகனங்களில் ஏற்றி தமிழகத்துக்கு கொண்டுவரப்படுகிறது. இதே போன்று தமிழகத்தில் இருந்தும் கனரக வாகனங்களில் வடமாநிலங்களுக்கு பொருட்கள் எடுத்த செல்லப்படுகிறது.  இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி இந்த சோதனை சாவடி வழியாக செம்மரக்கட்டை, மணல் மற்றும் எரிசாராயம் உள்ளிட்டவைகள் இரவு நேரங்களில் கடத்தப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் அவ்வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அந்த வழியாக ஆந்திராவில் இருந்து வந்த லாரியை மடக்கி சோதனை செய்தபோது, அதில், முறையான அனுமதி பெறாமல் 500க்கும் மேற்பட்ட கேன்களில் எரிசாராயம் எடுத்து வந்தது தெரிந்தது.  இதையடுத்து, அதில் இருந்த 3 பேரை கைது செய்தனர். பின்னர், 500க்கும் மேற்பட்ட கேன்களில் இருந்த 17 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து, எளாவூர் சோதனைசாவடியில் உள்ள அதிகாரிகள் பயன்படுத்தும் அறையில் வைத்து பூட்டினர். பின்னர் அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது.
மாதக்கணக்கில் எரிசாராயம் இருந்த கேன்கள் வெடித்து சிதறலாம்.  அதனால் அசம்பாவிதங்கள் நிகழலாம் என  அதிகாரிகள் அச்சமடைந்தனர்.

இந்நிலையில்  மாவட்ட கலெக்டர் மகஸே–்வரி உத்தரவின்பேரில் மதுவிலக்கு உதவி ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட மதுவிலக்கு துணைக் கண்காணிப்பாளர் கல்பனா தத், கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் அமுல்ராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார், நேற்று எளாவூர் ஏழு கண்ணு பாலம் அருகே பள்ளம் தோண்டி, சுமார் 500 கேன்களில் இருந்த எரிசாராயத்தை  ஊற்றி தீவைத்து எரித்தனர்.


Tags : checkpoint ,Elavur , Elamur, energy clearing, police
× RELATED தருமபுரி அருகே தொப்பூர் சோதனை சாவடியில் 16 கிலோ தங்கம் பறிமுதல்..!!