×

ஏர் இந்தியா, ரயில்வேயை விற்கின்றனர்: விட்டால் தாஜ்மகாலையும், செங்கோட்டையையும் விற்றுவிடுவார்கள்...மத்திய அரசை தாக்கிய ராகுல் காந்தி

டெல்லி: 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் சனிக்கிழமை அன்று தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள ஆம் ஆத்மியும், தலைநகரை கைப்பற்ற பாஜகவும், காங்கிரசும் முழு முனைப்பில் களம்  கண்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் கட்சி தலைவரும் வயநாடு எம்.பியுமான ராகுல்காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியில் ஜாங்பூராவில் நடைபெற்ற தேர்தலி பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியும், மத்தியில் ஆளும் பாஜக கட்சியும் எதையும் செய்யவில்லை. ஆனால் மார்க்கெட்டிங் செய்கின்றனர் என்று  குற்றம்சாட்டினார். மேலும், தங்கள் மார்க்கெட்டிங்-காக மக்களின் பணத்தை பயன்படுத்துகின்றனர். 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலை தருவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால், ஆட்சிக்கு வந்து 6 ஆண்டுகள் ஆகியும் வாக்குறுதியை அவர்  நிறைவேற்றவில்லை. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், வேலைவாய்ப்பு எதையும் உருவாக்கவில்லை என்றும் கூறினார்.

வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்டால், அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். நான் புள்ளி விவரங்களை தெரிவித்தால், ராகுல் கேள்வி கேட்பார். இதற்கு, எத்தனை இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து பதிலளிக்க நிதி அமைச்சர் மறுத்துவிட்டார் என்பதே அர்த்தம் என்றார்.

மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் 3 மணி நேரம் வாசித்தார். ஆனால், வேலைவாய்ப்பின்மையை சரி செய்ய எந்த தீர்வையும் அவர் சொல்லவில்லை. விவசாயிகளுக்கு எந்த திட்டமும் இல்லை. வெற்று  அறிக்கையாக மட்டுமே இருந்தது. மேக் இன் இந்தியா என பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், ஒரு தொழிற்சாலை கூட அமைக்கப்படவில்லை. இந்தியன் ஆயில், ஏர் இந்தியா, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், ரயில்வேயும் விற்கின்றனர்.  செங்கோட்டையையும் ஏன் தாஜ்மஹாலையும் கூட விற்பார்கள் என்றும் தெரிவித்தார்.



Tags : Rahul Gandhi ,railways ,Air India ,government ,Taj Mahal , Air India sells railways: Rahul Gandhi will hit Taj Mahal
× RELATED சொல்லிட்டாங்க…