×

தமிழகத்தில் 21 பேரின் ரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டதில் யாருக்கும் கரோனா பாதிப்பில்லை : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்ட அறிவிப்பு


சென்னை : தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை சீனாவில் மட்டும் 425 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது குறிப்புகளாக பின்வருமாறு.

*தமிழகத்தில் 21 பேரின் ரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டதில் யாருக்கும் கரோனா பாதிப்பில்லை. சென்னை கிங் ஆய்வு மையம், புனேவுக்கு அனுப்பி பரிசோதிக்கப்பட்டது.

*சீனாவில் இருந்து தமிழகம் வந்த 1,225 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

*சீனாவில் இருந்து வருபவர்களுக்கு தனி ஏரோ பிரிட்ஜ் அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

*என் 95, 3 அடுக்கு முகமூடிகள் அதிக அளவில் வாங்க அரசு திட்டமிட்டுள்ளது.

*சீனாவில் இருந்து விமானத்தில் வரக்கூடிய பயணிகள் பயன்படுத்த தனி நகரும் படிக்கட்டு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

*தமிழ்நாடு முழுவதும் தனி வார்டுகளுக்கு என்று 228 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

*சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு தனி வார்டுகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

*தமிழக அரசு மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட்டு வருகிறது.

*கேரள எல்லை பகுதிகளில் கிருமி நாசினி உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

*கரோனா வைரஸ் தொடர்பாக மத்திய அரசு வழங்கிய ஆலோசனைகளின் படி செயல்பட்டு வருகிறோம்.

*கேரள - தமிழக எல்லையில் முழுமையான கண்காணிப்பு பணிகளில் அரசு கவனம் செலுத்துகிறது.

இவ்வாறு விஜயபாஸ்கர் கூறினார்.


Tags : Vijayabaskar ,nobody ,Nadu ,Tamil Nadu , Corona, Virus, Vulnerability, Health Department, Minister, Vijayabaskar, China
× RELATED அதிமுக மாஜி அமைச்சரின் கல்லூரியில் மாணவன் சாவு