×

மக்களிடம் 'Blank cheque'கேட்கிறார் அமித்ஷா: பாஜகவால் டெல்லி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடியுமா?...அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கு

டெல்லி: 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் சனிக்கிழமை அன்று தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள ஆம் ஆத்மியும், தலைநகரை கைப்பற்ற பாஜகவும், காங்கிரசும் முழு முனைப்பில் களம்  கண்டு வருகின்றனர். ஆம் ஆத்மி சார்பில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மற்றும் பல அமைச்சர்கள் தொகுதி வாரியாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் டெல்லியில்,   துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிட்டார்.

அதில், பணியின் போது மரணமடையும் துப்புரவு பணியாளர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும். வீடு தேடி ரேசன் பொருட்கள்,  வலிமையான ஜன்லோக்பால், மூத்த குடிமக்கள் வழிபாட்டுதலங்களுக்கு செல்ல ரூ.10 லட்சம் நிதியுதவி, பெண்கள் பாதுகாப்பு, அனைவருக்கும் கல்வி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், தனிநபர் பயிற்சிக்கு சிறப்பு வகுப்புகள்  துவக்கப்படும். யமுனை ஆற்றங்கரையோரம் நவீனப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பா.ஜ.,வால் அறிவிக்க முடியுமா என சவால் விடுத்து,  அக்க்ட்சியை சேர்ந்த யார் கூட வேண்டுமென்றாலும் விவாதத்தில் ஈடுபட தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

 டெல்லியில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல், மக்களிடம் இருந்து பிளாங்க் செக் கை அமித்ஷா கேட்கிறார். மக்களிடமிருந்து  உத்தரவு வந்தது பின்னர், யார் முதல்வர் வேட்பாளர் என்பதை அறிவிப்போம் என அமித்ஷா கூறுகிறார். ஆனால், பாரதிய ஜனதா கட்சிக்கு வந்தால் யார் முதல்வர் என்பதை அறிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். படிக்காத அல்லது தகுதியில்லாத நபரை அமித்ஷா அறிவித்தால் என்ன செய்வது? அது டெல்லி மக்களை ஏமாற்றுவது போல் ஆகும். பாஜக-வால், யார் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடியுமா? அக்கட்சியை சேர்ந்த யாருடனும்  விவாதத்தில் ஈடுபட தயாராக உள்ளேன். நாளை (பிப்.,5) பிற்பகல் 1 மணிக்குள் அக்கட்சி முதல்வர் வேட்பாளரை அறிவிக்காவிட்டால், மீண்டும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்வேன் என்றும் பேசினார்.  டெல்லி விதான் சபையில் கடந்த 2015-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட டெல்லி ஜன லோக்பால் மசோதா கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. மசோதா நிறைவேற்றப்படுவதற்கான போராட்டத்தை ஆம் ஆத்மி அரசு  முன்னெடுக்கும் என்றும் தெரிவித்தார்.


Tags : candidate ,CM ,Delhi ,Arvind Kejriwal ,BJP ,Amit Shah ,attack , Amit Shah: Can BJP announce Delhi CM candidate? ... Arvind Kejriwal
× RELATED கைதுக்கு எதிரான டெல்லி முதல்வர்...