×

தமிழகம் முழுவதும் பல்வேறு குற்றவழக்குகளில் காவல்துறை பறிமுதல் செய்யும் வாகனங்கள் ஏலம் எடுக்க அரசு துறைக்கு முன்னுரிமை

வேலூர்: தமிழகம் முழுவதும் பல்வேறு குற்றவழக்குகளில் காவல்துறை பறிமுதல் செய்யும் வாகனங்களை ஏலம் எடுக்க இனி வரும் காலங்களில் அரசு துறைகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.  தமிழகம் முழுவதும் சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு, மதுவிலக்கு பிரிவு உட்பட காவல்துறை பிரிவுகளில், பல்வேறு குற்றங்கள் தொடர்பாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்த வாகனங்கள் அனைத்தும், மாவட்ட எஸ்பிக்கள் உத்தரவின்பேரில், ஏலம் விடுவதற்கான தேதி அறிவிக்கப்படும். அன்றைய தினம் பொதுமக்கள் நுழைவு கட்டணம் செலுத்தி டோக்கன் பெற்று, ஏலத்தில் பங்கேற்கலாம். அங்கு ஏற்கனவே, வாகனத்தின் விலை உரிய அதிகாரிகள் மூலம் கணக்கீடு செய்யப்பட்டு,  நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.

அதிக தொகைக்கு யார் ஏலம் கேட்கிறார்களோ அவர்களுக்கே வாகனம் வழங்கப்படும். இதில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று வாகனத்ைத ஏலம் எடுத்துச்செல்வார்கள். ஆனால், இனி வரும் காலங்களில், காவல்துறை சார்பில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களில் நல்ல நிலையில் உள்ள வாகனங்கள் அனைத்தும், காவல்துறை மற்றும் அனைத்து அரசுத்துறைக்கு மட்டுமே ஏலம் எடுக்க முன்னுரிமை வழங்கப்படும்.  இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர்கள் அனைத்து துறைக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைப்பார்கள். அதில் அரசுக்கு தேவையான வாகனங்கள் எடுத்துக்கொள்ளப்படும். பின்னர் மற்ற வாகனங்கள் வழக்கம்போல் பொது ஏலம் நடத்தப்படும் என்று காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : State Department ,bidding ,Tamil Nadu Police State Department of Priority ,Tamil Nadu , Tamil Nadu, Crime, Police, Government Department
× RELATED கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த...