×

தஞ்சை பெரியகோயிலில் நாளை குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் தீவிரம்: பக்தர்கள் குவிந்தனர்

தஞ்சை: தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழா நாளை (புதன்) காலை 9மணிக்கு மேல் 10 மணிக்குள் நடைபெறுகிறது. இதற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த மாதம் 27ம் தேதி துவங்கியது. குடமுழுக்கு யாகசாலை பூஜைகள் கடந்த 1ம் தேதி மாலை தொடங்கியது. இதற்காக வெண்ணாற்றங்கரையில் இருந்து கோயிலுக்கு புனிதநீர் எடுத்து வரப்பட்டு யாகசாலையில் வைக்கப்பட்டது. 11,900 சதுரஅடி பரப்பில் 110யாக குண்டங்கள் யாகசாலையில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு கருதி இந்தமுறை கோயில் வளாகத்திற்கு வெளியே கோயிலை ஒட்டியுள்ள திடலில் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜை  நடைபெற்று வருகிறது. 400க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களும், ஓதுவார்களும் கலந்து கொண்டு ஹோமம் நடத்தி வருகிறார்கள். நேற்று காலை 4ம் கால யாகசாலை பூஜைகளும், ஐந்தாம் கால யாகசாலை பூஜைகள் மாலை 5 மணி முதல் 8மணி வரையும் நடைபெற்றது. இன்று காலை 8 மணி முதல் 11 மணிவரை ஆறாவது யாகசாலை பூஜையும், மாலை 5 மணி முதல் 8 மணிவரை ஏழாம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது.

நாளை (5ம் தேதி) காலை 7 மணிக்கு மகா தீபாராதனையும், காலை 7.25 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெறுதட. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் அனைத்த விமான ராஜகோபுரங்களுக்கும் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெற
உள்ளது. 8 கால யாகசாலை பூஜைக்கும் ஆயிரம் கிலோ வெள்ளை மிளகு, நன்னாரி வேர், வலம்புரி காய், கர்சூரிக்காய், அதிமதுரம், லவங்கப்பட்டை, தேவதாருகட்டை போன்ற 124 மூலிகை பெருட்களை பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் தினந்தோறும், ஆயிரம் கிலோ அளவிலான செவந்தி, சம்பங்கி, தாமரை, ரோஜா போன்ற மலர்களும் அபிஷகேத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. கோயில் முழுவதும் கண்காணிப்பு கேமரா பாதுகாப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வாசலில் மெட்டல் டிடெக்டர் பொருத்தப்பட்டு அதன் மூலம் சோதிக்கப்பட்ட பின்னரே பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். இதுதவிர ஸ்கேனர் கருவியும் பொருத்தப்பட்டு உடைமைகள் சோதிக்கப்படுகிறது.

குடமுழுக்குக்கு 5 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கோயிலில் விஐபிக்களுக்கு தனியாக 9அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. வெளியில் நின்று குடமுழுக்கை பார்க்கும் பக்தர்களுக்காக கோயிலை சுற்றிலும் மிகப்பெரிய திரை கொண்ட எல்இடி டிவிக்கள் வைக்கப்பட்டு உள்ளன. டிஜிபி திரிபாதி ஆய்வு: குடமுழுக்கைெயாட்டி நகரில் போக்குவரத்து மாற்றம், வாகன நிறுத்துமிடம், கூட்ட நெரிசலை நெறிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர். இப்பணிகளை நேற்று டிஜிபி திரிபாதி ஆய்வு செய்தார். பாதுகாப்பு விவரங்கள் குறித்து மத்திய மண்டல் ஐஜி அமல்ராஜ், டிஐஜி லோகநாதன் ஆகியோரிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறுகையில்,  குடமுழுக்கை காண சுமார் 5 லட்சம் முதல் 10 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என  எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

சிறப்பு ரயில்கள்: தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கை முன்னிட்டு சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது. இன்று நள்ளிரவு முதல் நாளை இரவு வரை 500 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 5ம்தேதி உள்ளூர் விடுமுறை: குடமுழுக்கை முன்னிட்டு இப்போதே தஞ்சை நகரம் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. குடமுழுக்கையொட்டி நாளை  தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : funeral ceremony ,Pilgrims ,Thanjavur Periyakoil ,funeral , Tanjay Periyakovil, Kudumbullu Festival, devotees
× RELATED தஞ்சாவூர் பெரியகோயிலில் 20ம் தேதி...