×

மனைவி தற்கொலை செய்ததால் 2 குழந்தையை ரயிலில் வீசி கொன்று கணவனும் சாவு

சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொடைக்கல் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(34). இவரது மனைவி நிர்மலா(26). இவர்களுக்கு ட்சிதா(2), சஞ்சனா(1) என்ற 2 குழந்தைகள் இருந்தனர். வெங்கடேசன் மதுரையில் தங்கி தனியார் மருத்துவமனையில் ஆண் நர்சாக வேலை செய்து வந்தார். மாமனார், மாமியாருடன் இருந்த நிர்மலாவை ஆண் குழந்தை இல்லை என்று அவர்கள் திட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை படுக்கை அறையில் தூக்குப்போட்டு நிர்மலா தற்கொலை செய்து கொண்டாராம். தகவலறிந்த வெங்கடேசன், நேற்று மாலை கொடைக்கல் திரும்பி  2 பெண் குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு வெளியே சென்றுள்ளார். வாலாஜா அடுத்த அம்மூர் ரயில் நிலையம் அருகே நேற்றிரவு 7 மணியளவில் கோவை- சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 பெண் குழந்தைகளையும் வீசி கொன்று தானும் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.


Tags : suicide , Husband dies , wife , suicide
× RELATED சுத்தியலால் அடித்து மனைவி படுகொலை: கணவன் கைது