பேரணாம்பட்டு அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுத்தை குட்டி மீட்பு

பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் உள்ள 9 அடி ஆழ தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து காப்பு காட்டில் விட்டனர். வேலூர் மாவட்டம், ேபரணாம்பட்டு அடுத்த அரவட்லா மலைப்பாதை அருகே விவசாய நிலம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த சுமார் மூன்றரை வயது சிறுத்தை குட்டி இந்த நிலத்தில் உள்ள 9 அடி ஆழ தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளது. நேற்று காலை விவசாய நிலத்திற்கு வந்த உரிமையாளர் வெங்கடேசன், தண்ணீர் தொட்டியில் சிறுத்தை குட்டி விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சிறுத்தை குட்டி மேலே ஏற முடியாமல் தவித்தது. அவ்வப்போது குதித்து பார்த்தும் முடியாமல் சோர்ந்தது.  இதுகுறித்து அவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில்  கால்நடை மருத்துவர், தீயணைப்புத்துறையினரும் அங்கு வந்து ஏணி மூலம் சிறுத்தை குட்டியை பத்திரமாக மீட்டு அங்கேயே சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விட்டனர்.

Related Stories:

>