×

ஹஜ் தொண்டர்கள் தேர்வுக்கு 24க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள சவூதிஅரேபியா செல்லும் புனிதப் பயணிகளுக்கு உதவி செய்வதற்காக ஹஜ் தன்னார்வ தொண்டர்களை இந்திய ஹஜ் குழு அனுப்புவது வழக்கமாகும்.  இந்த ஆண்டு (ஹஜ் 2020) மும்பையிலுள்ள இந்திய ஹஜ் குழு, ஹஜ் தன்னார்வ தொண்டர்களை தேர்வு செய்வதற்கான சுற்றறிக்கையை www.hajcommittee.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிட்டுள்ளது. ஆவண நகல்களுடன் செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, ரோஸி டவர், மூன்றாம் தளம், எண்.13, மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை) சென்னை-34 என்ற முகவரிக்கு வரும் 24ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


Tags : Hajj volunteers , Hajj volunteers
× RELATED ஹஜ் தன்னார்வ தொண்டர்களை தேர்வு...