×

சென்னை விஐடியில் தேசிய கலை, விளையாட்டு போட்டி: பியுஷ் சாவ்லா பங்கேற்கிறார்

சென்னை: சென்னை விஐடி  வளாகத்தில் பிப். 6 முதல் 3 நாட்கள் நடக்கும்  தேசிய அளவிலான 5வது கலை, விளையாட்டு போட்டியில் சிறப்பு விருந்தினராக கிரிக்கெட் வீரர் பியுஷ் சாவ்லா பங்கேற்கிறார்.விஜடி துணைத் தலைவர்  சேகர் விசுவநாதன்,  துணை வேந்தர் டாக்டர் ஆனந்த் சாமுவேல்,  கூடுதல் பதிவாளர் டாக்டர் மனோகரன் ஆகியோர், போட்டிகளுக்கான சீருடைகளை சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தி பேசியதாவது:சென்னை விஐடி சார்பில் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் பங்கேற்கும் கலை, விளையாட்டு விழாவை கடந்த 4 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.

இந்த ஆண்டு ‘வைபரன்ஸ் 2020’ என்ற பெயரில் பிப்.6, 7, 8 தேதிகளில் 3 நாட்கள் நடத்த உள்ளோம். திரை பிரபலங்கள் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். விளையாட்டு போட்டிகளுக்கான நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் பியுஷ் சாவ்லா சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்வார். கால்பந்து, வாலிபால், கூடைப்பந்து,  டேபிள் டென்னிஸ், செஸ் என 23வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். இதில் நாடு முழுவதிலும் இருந்து 40 கல்லூரிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. கிரிக்கெட் போட்டிக்கு மட்டும் அதிகபட்சமாக 32அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டியின் மொத்த பரிசுத் தொகை சுமார் 5 லட்சம்.Tags : Piyush Chawla ,VIT ,Chennai , Piyush Chawla ,part, National Art ,Sports
× RELATED வறட்சி பகுதியாக அறிவிக்க கோரிக்கை