×

ஐசிசி டி20 தரவரிசை 2வது இடத்துக்கு முன்னேறினார் ராகுல்

துபாய்: டி20 போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில், இந்திய அணி தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 2வது இடத்துக்கு முன்னேறினார். நியூசிலாந்துடன் நடந்த டி20 தொடரில் 5 போட்டியில் 224 ரன் குவித்து (அதிகம் 57*, சராசரி 56.00, அரை சதம் 2) தொடர் நாயகன் விருது பெற்ற ராகுல் 823 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தானின் பாபர் ஆஸம் (879) முதலிடத்தில் உள்ளார். இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி (673) 9வது இடத்திலும், ரோகித் ஷர்மா (662) 10வது இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சு, ஆல் ரவுண்டர் டாப் 10ல் இந்திய வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Rahul , ICC T20, ranking, Rahul
× RELATED சொல்லிட்டாங்க…