×

நியூசிலாந்துடன் ஒருநாள், டெஸ்ட் தொடர் காயத்தால் விலகினார் ரோகித்

மவுன்ட் மவுங்கானுயி: நியூசிலாந்து அணியுடன் நடைபெற உள்ள ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இருந்து, இந்திய அணி நட்சத்திர வீரர் ரோகித் ஷர்மா காயம் காரணமாக விலகியுள்ளார்.நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் நடந்த டி20 தொடரில் அபாரமாக விளையாடிய இந்தியா 5-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து சாதனை படைத்தது. மவுன்ட் மவுங்கானுயி, பே ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த 5வது போட்டியில், கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்டு ரோகித் தலைமையில் இந்தியா களமிறங்கியது.

3வது வீரராக விளையாடிய ரோகித் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 54 ரன் எடுத்திருந்தபோது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு வலியால் துடித்தார். களத்திலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் ஒரு இமாலய சிக்சரை விளாசிய ரோகித், தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால் களத்தில் இருந்து வெளியேறினார் (ரிட்டயர்டு ஹர்ட்). காயத்தின் தன்மை தீவிரமாக உள்ளதால், நியூசி. டூரில் இருந்து ரோகித் விலகுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக மயாங்க் அகர்வால், பிரித்வி ஷா, ஷுப்மான் கில் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா - நியூசி. மோதும் முதல் ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இந்திய நேரப்படி நாளை காலை 7.30க்கு தொடங்குகிறது.

Tags : Rohit ,ODI ,New Zealand ODI Test ,New Zealand , New Zealand, ODI Test , Rohit ,injury
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்திய...