பிரதமரின் மவுனத்தால் டெல்லியில் துப்பாக்கிச்சூடு: சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

புதுடெல்லி: தலைநகரில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு மோடி மவுனமே காரணம் என மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

 மத்திய அமைச்சர் மற்றும் பாஜ நிர்வாகிகள் வன்முறையை தூண்டும் வகையில் பேசிவருவதாலும் பிரதமர் இது தொடர்பாக தொடர்ந்து மவுனம் காப்பதாலும் தலைநகர் டெல்லியில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெறுவதற்கு காரணமாக உள்ளது. அமைச்சர்கள் வன்முறையை தூண்டுவதால் அனைவரும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளனர். ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்புக்கும் மத்திய மாநில அரசுகளே பொறுப்பு. அமைதி வழியில் போராடுவது குடிமக்களின் உரிமை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>