×

ஜம்முவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து

ஜம்மு: ஜம்முவில் நேற்று ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ரியாசி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஹெலிகாப்டரை அர்னாஸ் மாவட்டத்தை ஓட்டிய ரூத்குத் பகுதியில் அவசரமாக தரையிறக்க முயன்றபோது, கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த இரண்டு விமானிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தனர்.Tags : Army helicopter crashes ,Jammu ,helicopter crashes ,Jammu Army , Jammu, Army ,helicopter ,crashes
× RELATED குஜராத் மாநிலத்தில் கொரோனாவால்...