×

‘கல்லா’ கட்டணுமில்லப்பு... மாணவர்களிடம் ‘வசூல்’ நடக்கும் நேரத்தில் பள்ளிகளில் கொள்ளையடித்த நவீன திருடன்

திருவனந்தபுரம்: தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அட்மிஷன் சமயத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளில் கொள்ளையடித்து வந்த தக்கலையை சேர்ந்த வாலிபரை கொல்லம் போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள ஒரு தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நள்ளிரவு புகுந்த திருடன் அங்கிருந்த 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் நடந்தது. அதுபோல் புனலூர் மேல்நிலை பள்ளியில் 1.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் தொடர்பாக கொல்லம் மற்றும் புனலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.இந்த நிலையில் கடந்த டிசம்பர் 6ம் தேதி கொல்லம் நகரில் உள்ள ஒரு பள்ளியில் ₹60 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த பள்ளியில் இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் பொருட்களும் சேதப்படுத்தப்பட்டிருந்தது. அதே நாளில் வேறொரு பள்ளியில் மேஜையில் இருந்த ஒரு ஆசிரியையின் 3 பவுன் நகை மற்றும் ₹50 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது.

இது தொடர்பாக கொல்லம் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பள்ளி அருகே உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, நள்ளிரவில் சொகுசு காரில் வந்த வாலிபர் பள்ளியில் திருடிவிட்டு சென்றது பதிவாகி இருந்தது. அந்த வீடியோ பதிவு அடிப்படையில் நடந்த விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டது, குமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த வினோத் (28) என ெதரிய வந்தது. ெதாடர்ந்து நடந்த விசாரணையில், கடலூரில் உள்ள வினோத்தின் மனைவி வீட்டில் அவர் இருப்பது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பள்ளிகளை குறித்து அட்மிஷன் நாட்களில் கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது. தமிழ்நாட்டில் இதுவரை 23 பள்ளிகளில் அவர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். இவர் இதுபோல் கேரளாவிலும் ஏராளமான பள்ளிகளில் திருடியுள்ளார்.

Tags : Kalla ,schools , charcoal ...,collecting , schools
× RELATED தோகைமலை அருகே அனுமதி இல்லாமல் கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்