×

விபரீத பேச்சு அமைச்சரை முதல்வர் கண்டிக்க வேண்டும்: தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர்கள் வலியுறுத்தல்

சென்னை: தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர்கள் அருணன் மற்றும் உதயகுமார் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: திருச்சியில் நடந்த ஒரு கொலையையொட்டி தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேவையற்ற பிரச்னைகளை கிளப்பி வகுப்புவாத மோதலைக் கிளறிவிடும் முயற்சியை செய்துள்ளார். திருச்சி காந்தி மார்க்கெட்டில் விஜய ரகு என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் இந்த கொலை மதரீதியாக நடந்துள்ளது.இஸ்லாமிய தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் திமுக உள்ளிட்ட சில அரசியல் இயக்கங்கள் தொடர்ந்து செயல்படுகின்றன, அதனால் இந்து பயங்கரவாதம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது என்று பேசியுள்ளார்.

இந்தக் கொலையில் வகுப்புவாத பிரச்னை எதுவும் இல்லை, இது தனிப்பட்ட பகை காரணமாக நடந்த கொலை என்று போலீஸ் தரப்பிலேயே கூறப்பட்டுள்ள நிலையில் அமைச்சரின் இத்தகைய பேச்சு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.அமைச்சரின் இந்த விபரீத பேச்சை தமிழக முதல்வர் வெளிப்டையாகக் கண்டிக்க வேண்டும். இல்லையெனில் அவருக்கும் இது ஏற்புடையது என்றே மக்கள்  முடிவு கட்டுவார்கள். அது இந்த ஆட்சிக்கு மிகப்பெரிய களங்கமாகிப் போகும். தமிழக மக்கள், அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்புவதுடன், அவரது மதவெறித் தூண்டலுக்கு இரையாகாமல் மத நல்லிணக்கம் காக்க வேண்டும்.


Tags : CM ,Minister ,Tamil Unity Platform Coordinators , CM, people of Tamil Nadu, coordinators
× RELATED நாடு காக்க; நாளைய தலைமுறை காக்க;...