அண்ணா நினைவு நாள் மதிமுக அமைதி பேரணி: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னை: அண்ணா நினைவு நாளையொட்டி மதிமுக சார்பில் அமைதி பேரணி நடந்தது. அண்ணா 51வது நினைவு நாளை முன்னிட்டு மதிமுக சார்பில் நேற்று மாலை 4 மணியளவில் அமைதி பேரணி நடந்தது. திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தொடங்கிய பேரணி, அண்ணா நினைவிடம் அமைந்துள்ள மெரினா கடற்கரை வரை சென்றது. பேரணிக்கு துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமை தாங்கினார். இதில் பல்வேறு நிர்வாகிகள் தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், அண்ணா நினைவு நாளை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேமூர்த்தி மரியாதை செலுத்தினர். அதேபோன்று, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு வைகோ மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories:

>