×

இந்தியாவில் முதலீடு செய்ய தனியார் நிறுவனங்கள் பயப்படுகின்றன: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு

சென்னை: இந்தியாவில் முதலீடு செய்ய தனியார் நிறுவனங்கள் பயப்படுகின்றனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.  சென்னை, திநகரில் உள்ள தனியார் ஓட்டலில் தென்னிந்திய வர்த்தக சபை சார்பில் 2020-21ம் ஆண்டிற்கான பட்ஜெட் குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.  இதையடுத்து கருத்தரங்களில் அவர் பேசியதாவது: இந்திய பொருளாதாரம் கடுமையாக சரிந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு பயப்படுகின்றனர். அரசின் பொருளாதார கொள்கை குறித்து தொழில் கூட்டமைப்பு பேச வேண்டும். எல்ஐசி பங்கு தனியாருக்கு விற்பனை செய்வது எனக்கு உடன்பாடு உள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி எந்த முடிவும் எடுக்கவில்லை. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பட்ெஜட் குறிப்பிட்ட தரப்பினர்களுக்கு மட்டும் பயனுள்ளதாக உள்ளது. எல்ஐசி விற்பனை குறித்து உண்மையான விளக்கத்தை மத்திய அரசு விளக்க வேண்டும். ஏர்இந்தியாவை தனியார்ருக்கு விற்பனை செய்வதை ஆதரிக்கிறேன். ஆனால் அதை விற்பது எளிதானது இல்லை. பட்ஜெட் புதிதாக விமானநிலையம் அமைக்கும் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது. இது மக்களிடத்தில் நேரடியாக சென்று செல்லும் திட்டம் இல்லை. எனவே இதற்கு ஒதுக்கப்பட்ட தொகையை மகாத்மா காந்தி திட்டம் போன்றவைகளில் செலவு செய்யலாம். இவ்வாறு அவர் பேசினார்.


Tags : P Chidambaram ,companies ,India , Former Union Minister P. Chidambaram
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...