×

பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வு கேரளாவில் கொரோனா வைரஸ் மாநில பேரிடராக அறிவிப்பு: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் ஒரு மாணவருக்கு ெகாரோனா  வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து. சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ், அங்கிருந்து வெளியேறியவர்களால் மற்ற நாடுகளிலும் அந்த வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் கேரளாவில் தான்  முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள வுகான்  மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்து வந்த திருச்சூரை சேர்ந்த மாணவிக்கும்  ஆலப்புழாவை சேர்ந்த  ஒரு மாணவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி  செய்யப்பட்டது. மாணவி திருச்சூர் மருத்துவ கல்லூரியிலும் மாணவர் ஆலப்புழா  மருத்துவ கல்லூரியிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் ஒரே விமானத்தில்  கேரளா திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரது உடல்நலமும்  தற்போது திருப்திகரமாக இருப்பதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சீனாவின் வுகானில் அதே கல்லூரியில்  படித்து வரும் காசர்கோடு மாவட்டம் காஞ்சாங்காட்டை சேர்ந்த ஒரு மாணவருக்கும்  கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர் கடந்த வாரம் ஊருக்கு  வந்திருந்தார். இவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி தென்பட்டதை அடுத்து  காசர்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது  ரத்தம் மற்றும் உமிழ்நீர் பரிசோதனைக்காக புனேக்கு அனுப்பி  வைக்கப்பட்டதில், அவருக்கு வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதியானது.
ஆனால் அவரது உடல்நிலை திருப்திகரமாக உள்ளதாக டாக்டர்கள்  தெரிவித்துள்ளனர்.  தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதித் தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பாதால் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப் பதற்காக இது மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவரின்  எண்ணிக்கை 3 உயர்ந்துள்ளது. இது மக்கள் மத்தியில் மேலும் பீதியை  அதிகப்படுத்தி உள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்கிடையே  சீனாவில் இருந்து திரும்பி, வீடுகளில் கண்காணிக்கப்படுவோரின் எண்ணிக்கை  1924 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் 28 நாட்கள் வீட்டைவிட்டு வெளியே  செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கொரோனா  வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் வதந்திய பரப்பிய மேலும் 2 இளம்பெண்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். இதனால் கைது எண்ணிக்கை  5 ஆகியுள்ளது.

சீன பெண்ணுக்கு தடை:
கடந்த மாதம் 27ம்  தேதி சீனாவின் கியாங்டோங்க் என்ற இடத்தில் இருந்து 28 வயது சீன பெண் ஒருவர் இந்தியா வந்துள்ளார்.  பின்னர் வாரணாசி சென்றவர் அங்கிருந்து நேற்று கொச்சி வந்துள்ளார். இங்குள்ள  ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து சுற்றுலாத்தலங்களுக்கு சென்று வர  திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இந்த தகவல் தெரியவந்ததை தொடர்ந்து, அங்கு சென்ற அதிகாரிகள் அவர் வெளியே செல்ல தடை விதித்தனர். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள்  கூறுகையில், ‘‘முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே சீனாவில் இருந்து வந்த  சுற்றுலா பயணியை வீட்டில் தங்க வைத்துள்ளோம். இவர் ஏற்கனவே பெங்களூரில்  இருந்து வந்துள்ளார். அவருக்கு பெங்களூருவிலேயே அனைத்து மருத்துவ  பரிசோதனைகளும் முடிந்து விட்டன. எனவே யாரும் பீதியடைய வேண்டாம்’’ என கூறினர்.



Tags : Kerala ,State Coroner ,Minister of Health ,Virus Announces State , Kerala, Coronavirus, State Disaster, Health Minister
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...