×

திருப்பதி கோவிந்தராஜசுவாமி கோயிலில் தெப்பல் உற்சவம்: முத்துக்கவச அலங்காரத்தில் வலம் வந்த கோதண்டராமர்

திருமலை: திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர தெப்பல் உற்சவம் நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர தெப்பல் உற்சவம் நேற்று தொடங்கி வரும் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தெப்பல் உற்சவத்தையொட்டி தினமும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவ சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளனர். தெப்பல் உற்சவத்தின் முதல் நாளான நேற்று கோதண்டராம சுவாமி முத்துக்கவச அலங்காரத்தில், தங்க, வைர ஆபரணங்கள் அணிவித்து ஜீயர்கள் முன்னிலையில் தெப்பத்தில் 5 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் துணை செயல் அலுவலர் வரலட்சுமி, அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 2ம் நாளான இன்றிரவு பார்த்தசாரதி அலங்காரத்தில் சுவாமியும், 4ம் தேதி கல்யாண வெங்கடேஸ்வர சுவாமியும், 5ம் தேதி கிருஷ்ணருடன் ஆண்டாள் தாயார் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். 6,7,8 ஆகிய தேதிகளில் உற்சவர் கோவிந்தராஜ சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் தெப்பக்குளத்தில் 7 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர். தெப்ப உற்சவத்தையொட்டி அன்னமய்யா மற்றும் தாச சாகித்தியா திட்டத்தின் சார்பில் பஜனை, ஆன்மீக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடந்தது.



Tags : festival ,Tirupati Govindarajaswamy ,Tirupati Govindarajaswamy Temple ,Muttakavasam ,Theppal Festival , Theppal Festival at Tirupati Govindarajaswamy Temple: Gothantaramara in the Muttakavasam outfit
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...