×

மதுரையில் குடிபோதையில் பைக் ஓட்டியவரிடம் அபராதம் வசூலித்த காவலர்: அதிகமான பணம் வசூல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு வீடியோ வெளியீடு

மதுரை:  மதுரையில் குடிபோதையில் பைக் ஒட்டியவரிடம் அபராத தொகையை விட கூடுதலாக 500 ரூபாய் பணம் வசூலித்ததாக போக்குவரத்து தலைமைக்காவலர் மீது புகார் எழுந்துள்ளது. மதுரை மாரியம்மன் தெப்பக்குள பகுதியில் போக்குவரத்து தலைமைக்காவலர் அரிச்சந்திரன் மற்றும் காவலர்கள், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வந்த ஒருவரிடம் அபராத தொகையாக 10 ஆயிரம் ரூபாயுடன்,  கூடுதலாக 500 ரூபாய் கேட்டு போக்குவரத்து தலைமைக்காவலர் அரிச்சந்திரன் அடாவடியாக பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

பணம் கேட்டு பேரம் பேசியதாக கூறப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் காவலர் பேசியதாவது, மதுரை மாவட்டத்தில் மட்டும் ஒரு நாளைக்கு ஒரு காவலர் 10 பேரிடமிருந்து பணம் வசூல் செய்கின்றனர் என அவர் கூறியுள்ளார்.  இந்நிலையில்,  இதுகுறித்து தெரிவித்துள்ள மதுரை காவல் ஆணையர் டேவிட் தேவ ஆசிர்வாதம், சம்மந்தப்பட்ட காவலர் மீது விசாரணை நடத்தி, அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags : policemen ,Gujarat ,Madurai Madurai ,bike ride , Madurai, Drunk, Fines, Guard, Accusation, Video, Release
× RELATED மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால் 2024...