×

குரூப் 4 பாணியிலேயே குரூப் 2ஏ தேர்விலும் மேஜிக் பேனாவை பயன்படுத்தி முறைகேடு?

சென்னை : குரூப் 4 பாணியிலேயே குரூப் 2ஏ தேர்விலும் மேஜிக் பேனாவை பயன்படுத்தி முறைகேடு அரங்கேற்றுப்பட்டு இருப்பது அம்பலம் ஆகியுள்ளது. தலைமறைவாக இருக்கும் இடைத்தரகர்கள் ஜெயக்குமார் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் குரூப் 2ஏ முறைகேடு தொடர்பான ஆவணங்களோடு 60 மேஜிக் பேனாக்களும் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன. இந்த பேனாக்களை பயன்படுத்தி தேர்வு எழுதும் அதிகபட்சமாக அரைமணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள் விடைத் தாளில் பயன்படுத்தப்பட்ட மை அழிந்திருக்கிறது.

இதன் பின் ஜெயக்குமார், சித்தாண்டி கூட்டணி வகுத்த திட்டப்படி சரியான விடைகள் நிரப்பப்பட்டு முறைகேடு அரங்கேற்றப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. குரூப் 4 தேர்வு முடிவுகள் மூலம் முறைகேடு வெளிச்சத்திற்கு வந்தாலும் 2017ல் நடந்த குரூப் 2ஏ தேர்விலேயே மேஜிக் பேனாக்களை கொண்டு கைவரிசை காட்டி இருப்பது அம்பலமாகி உள்ளது. இந்த வகை பேனாக்கள் சென்னையில் பாரீஸ் கார்னரில் உள்ள கடைகள் மற்றும் ஆன்லைனிலும் விற்பனை செய்யப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான ஆதாரங்களை திரட்டி வரும் சிபிசிஐடி, ஜெயக்குமார் சித்தாண்டி கூட்டணி கைவரிசை பற்றி விசாரணை வளையத்தை விரிவுப்படுத்தியுள்ளனர்.


Tags : Group 4 , Group 2A, Jayakumar, Intermediaries, Malpractice, Magic Pen
× RELATED குரூப்-4 தேர்வு வினாத்தாள் குமரிக்கு...