×

திருச்சுழி அருகே பள்ளி செல்லும் வழியில் பயமுறுத்தும் மின்கம்பங்கள்; எலும்புக் கூடாக நிற்கின்றன: மாற்றி அமைப்பது எப்போது?

திருச்சுழி: திருச்சுழி அருகே, பூச்சுகள் உதிர்ந்து, ஒடிந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சுழி அருகே உள்ள மறவர்பெருங்குடி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி, கூட்டுறவு வங்கி உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்நிலையில், கிராமத்தில்  சுத்தமடம் செல்லும் சாலையில், ஓரமாக உள்ள மின்கம்பங்கள் பூச்சுகள் உதிர்ந்து ஒடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இச்சாலை வழியாக தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பள்ளி செல்லும் மாணவ, மாணவியரும் சென்று வருகின்றனர். மின்கம்பங்கள் இருக்கும் பகுதியில் கடைகள் இருப்பதால், பொதுமக்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர்.

இந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்கக்கோரி, மின்வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. எனவே, மின்கம்பங்கள் ஒடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்படும் முன், அதனை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘ஊரில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில், பல ஆண்டுகளாக எலும்புக் கூடாக நிற்கின்றன. மேலும், பள்ளி செல்லும் வழியில் மின்கம்பங்கள் இருப்பதால், மாணவர்கள் அச்சத்தோடு செல்கின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும், கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே, விபத்து ஏற்படும் முன் மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும்’ என்றனர்.

Tags : school ,Bone ,Tiruchi , thiruchchuli , school, spooky batteries
× RELATED புதுக்கோட்டை அரசு பள்ளியில் வானியல் திருவிழா