×

இந்தத் தீவின் வயது 1 லட்சம்!

நன்றி குங்குமம் முத்தாரம்

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம் பரியம் உள்ள கிரேக்க உணவுகளைச் சுவைத்துப் பார்க்க ஆசையா?  உடனே விசிட் அடியுங்கள் க்ரீட் தீவுக்கு. கிரீஸில் உள்ள தீவு களில் மிகப்பெரியது மற்றும் அதிக மக்கள் தொகையைக் கொண்ட தீவும் கிரீட் தான். தவிர, மத்தியதரைக்கடலில் உள்ள தீவுகளில் ஐந்தாவது பெரிய தீவு மற்றும் உலகின் 88-வது பெரிய தீவும் இதுவே. குறைந்த பட்சம் பத்து நாட்கள் தங்கி யிருந்தால்தான் தீவை ஓரளவுக்காவது சுற்றிப்பார்க்க முடியும்.

ஆறு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இந்தத்  தீவில் ஒரு லட்சத்து முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலி ருந்தே மனிதர்கள் வசித்து வருகிறார்கள். ஐரோப்பாவில் முதல் மேம்படுத்தப்பட்ட நாகரிகத்தின் மையமாக கிரீட்தான் இருந்திருக்கிறது. அத்துடன் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க புரியாகவும் திகழ்கிறது கிரீட்.

Tags : island , The island is one million years old!
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...