×

தைப்பூச தெப்ப உற்சவத்தையொட்டி நெல்லையப்பர் கோயில் வெளி தெப்பத்தில் தூய்மை பணி: உழவார பணிக்குழுவினர் பங்கேற்பு

நெல்லை: நெல்லையப்பர் கோயில் தைப்பூச திருவிழா  தெப்ப உற்சவத்தையொட்டி வெளி தெப்பத்தில் குறிச்சி திருநாவுக்கரசு உழவார பணிக்குழுவினர் தூய்மைப்பணியில் ஈடுபடடனர். வற்றாத ஜீவநதியாம் தன் பொருநை எனும் தாமிரபரணி பாய்ந்து வளம் கொழிக்கும் நெல்லைக்கு திக்கெட்டும் புகழ் சேர்க்கும் வகையில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோயில் திகழ்கிறது. பாரம்பரயமிக்க இக்கோயிலில் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடந்து வருகின்றனர். இதில் தனித்துவமிக்க தைப்பூச திருவிழா தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவில் நேற்று நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா வைபவம் நடந்தது. இதைத்தொடர்ந்து  வரும் 8ம்  தேதி நெல்லை சந்திப்பு கைலாசபுரம் சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு தைப்பூசத் தீர்த்தவாரி நடக்கிறது.

வரும் 9ம் தேதியன்று சவுந்திரசபா மண்டபத்தில் சுவாமி சவுந்திர சபா ஸ்ரீ நடராஜர் திருநடனக் காட்சி நடக்கிறது. மறுநாள் (10ம் தேதி) இரவு 7 மணிக்கு சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சந்திர புஷ்கரணி எனப்படும் வெளி தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். இதையொட்டி பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். தெப்ப உற்சவத்தை முன்னிட்டு மேலப்பாளையம் குறிச்சி சொக்கநாதர் கோயில் திருநாவுக்கரசு உழவாரப் பணிக்குழுவைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், வெளிதெப்பத்தில் நேற்று தூய்மைப்பணி எனப்படும் உழவாரப் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். இதில் தெப்பத்தில் அதிக அளவில் தேங்கி நின்ற அமலை ெசடிகள், பாசி கழிவுகள், பிளாஸ்டிக்  குப்பைகளை முழுமையாக அகற்றினர். மேலும் குளத்தை சுற்றியுள்ள பகுதியிலும் உழவாரப் பணி மேற்கொண்டனர்.

Tags : cleaning work ,Thaipoosam Teapu Festival Nellayappar Kovil , Thaipoosam Tea Festival, Nelliappar Temple, Cleaning Work
× RELATED அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்...