×

கடலூரில் நைட் ஸ்டடி என கூறி தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் மீது புகார்

கடலூர்:  கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலையடுத்துள்ள அறந்தாங்கியில் நைட் ஸ்டடி என கூறி தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கியில் கிருத்ஸ்துவ ஆலையம் ஒன்று அமைந்துள்ளது. இதன் கட்டுப்பாட்டில் புனித அந்தோனியார் என்ற பெயரில் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவிகள் பள்ளியின் விடுதியில் தங்கி வருகின்றனர். இதற்கிடையே, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஆலயத்தின் பாதிரியாராக நியமிக்கப்பட்ட மரிய விக்டோ என்பவர் பள்ளி தாளாளராகவும் செயல்பட்டு வந்தார். பதவியேற்று சில நாட்களிலேயே பள்ளி விடுதி காப்பாளராக இருந்த 2 பேரை நீக்கிய அவர்,  விடுதி பொறுப்புகளையும் அவரே பார்த்து வந்தார். அவ்வப்போது விடுதியில் தங்கியுள்ள மாணவிகளை நைட் ஸ்டடி என கட்டாயப்படுத்தி வரவழைக்கும் பாதிரியார் மரிய விக்டோ மாணவிகளின் மீது பாலியல் ரீதியாக,  அத்துமீறயதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, தனது அறையை சுத்தம் செய்ய வேண்டுமென வரவழைக்கும் மாணவிகள் அனைவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்தாக சொல்லப்படுகிறது.

விடுதியில் பெண் காப்பாளர்களை நியமிக்க மாணவிகள் பலமுறை வலியுறுத்தியும்,  மரிய விக்டோ அதனை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. பாதிரியாரின் தொடர் கொடுமையை தாங்க முடியாத மாணவிகள், இதுகுறித்து ஆசிரியர்களிடம், கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். பின்னர் தமிழக முதலமைச்சரின் தனி பிரிவிற்கு, புகார் மனு அளிக்கப்பட்டதையெடுத்து, கடலூர் மாவட்ட ஆட்சியர் புகார் குறித்து விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி, பட்டாளம் வட்ட வளங்கள் அலுவலர் சாருலதா மற்றும் சமூக நல பாதுகாப்பு தாசில்தார் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளிக்கு சென்று மாணவிகளிடம் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவிகள் தங்களுக்கு நேர்ந்தவற்றை அதிகாரிகளிடம் கூறினர். அதனை அதிகாரிகள் ஆட்சியரிடம் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டனர். பாதிரியார் மரிய விக்டோவிற்கு, அதே ஊரை சேர்ந்த ஒரு தரப்பினர் ஆதரவாக செயல்படுவதாக கூறப்படும் நிலையில், சோழவரம் போலீசார் புகார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : A Criminal Investigator ,priest ,private school student ,Cuddalore , Cuddalore, Night Study, Sexual Harassment, Priests, Complaints
× RELATED அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள...