×

எய்ம்ஸ் மருத்துவமனை சாலைக்காக வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்

திருப்பரங்குன்றம்: எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்திற்கு செல்லும் சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்படும் மரங்கள் பத்திரமாக வேறு இடத்தில் நடப்படுகின்றன. மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 224 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது. எய்ம்ஸ் அமையவுள்ள பகுதிக்கு பெங்களூரு கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 22 கோடி மதிப்பில் சுமார் 6.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக ஆஸ்டின்பட்டி பகுதியில் சாலையில் உள்ள 26 வேம்பு ரக மரங்கள் அகற்றப்பட உள்ளது.

இந்த நிலையில் இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனையடுத்து இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்ற நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்க பணிக்காக அக்ற்றப்படும் மரங்களை பத்திரமாக பொக்லைன் இயந்திரம் மூலம் வேரோடு தோண்டி எடுத்து இதே பகுதியில் புதிதாக குழிகள் அமைத்து அதில் மரங்களை நட்டு வைக்கின்றனர். இதுவரை சுமார் 5க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு பிடுங்கி நடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறையினரின் இந்த முயற்சியை இப்பகுதி மக்கள் வரவேற்கின்றனர்.

Tags : elsewhere ,road ,AIIMS , AIIMS Hospital, Road, Trees
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...