×

கூண்டுக்குள் அடைத்து வைத்து குருவிகள் விற்பனை அமோகம்: ஆர்வத்துடன் வாங்கிச்சென்ற மக்கள்

போச்சம்பள்ளி: தமிழகத்தில் பலவிதமான பறவைகள் வாழ்ந்து வந்தன. மரங்கள் அழிக்கப்படுவதின் காரணமாகவும், செல்போன் டவர்களின் கதிர் வீச்சாலும் குருவி இனங்கள் நாளடைவில் அழிய தொடங்கியது. சிட்டுக் குருவியை யாரும் மறந்து விட முடியாது. இதன் சத்தமும், நடையும் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கும்.  இத்தகைய சிட்டுகுருவி மரங்களிலும், வீடுகளில் மேல் உள்ள பரண்கள், பொந்துகளில் வைக்கோலால் கூடு கட்டி வாழும் தன்மை கொண்டது. இத்தகைய சிட்டுக்குருவிகள் இனம் அழியத் தொடங்கியுள்ளது.

தற்போது குருவி இனங்களை காணவேண்டும் என்றால் கம்யூட்டர் மற்றும் பாடப்புத்தங்களில் மட்டுமே பார்க்க முடியும் என்ற அளவிற்கு குருவி இனங்கள் அழிந்து வருகிறது. இந்நிலையில் போச்சம்பள்ளி பகுதியில் கூண்டுக்குள் அடைத்து வைத்து பல வண்ணக்கலர்களில்  குருவிகளை விற்பனை செய்து வருகிறார்கள். கூண்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் ஒரு ஜோடி குருவி ரூ100 க்கு விற்பனை செய்யப்பட்டது. குருவிகளை பார்த்தவுடன் சிறுவர் முதல் பெரியவர் வரை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.


Tags : Cage, sale of sparrows
× RELATED திருவள்ளூரில் நாளை மறுநாள் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்