×

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு 196 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க ஆசிரியர் தேர்வு மையம் முடிவு

சென்னை:  பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 196 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை விதிப்பது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 196 தேர்வர்களுக்கு, டிஎன்பிஎஸ்சியில் விதித்தது போன்றே, வாழ்நாள் தடை விதிக்க டிஆர்பி முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை இன்றைய தினம் வெளியிட உள்ளது. 2017ம் ஆண்டு 1058 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தேர்வுகள் நடைபெற்றது. இத்தேர்வில் 196 தேர்வர்கள் இடைத்தரர்கள் மூலம் பணம் கொடுத்து வெற்றி பெறுவதற்காக, முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இம்முறைகேடு புகார் நிலுவையில் உள்ள நிலையில், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இச்சூழலில் 2019ம் ஆண்டு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை மீண்டும் நடத்துவற்கான அறிவிப்பை ஆசிரியர் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில், அதற்கான விண்ணப்ப பதிவானது, வரும் பிப்ரவரி 12ம் தேதி வரை நடைபெற்ற இருக்கிறது.

விண்ணப்ப பதிவிற்கு கடந்த ஆண்டு முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேரும் மீண்டும் விண்ணப்பித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனெனில் 196 பேரும் இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்திருப்பதால், மீண்டும் அவர்கள்  தேர்வு எழுதினால் கண்டிப்பாக பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று இடைத்தரகர்கள் உறுதியளித்திருப்பாக தகவகள் வெளியாகியுள்ளது. இச்சூழலில் கடந்த வாரம் டிஆர்பியானது  ஒரு அவசர ஆலோசனை கூட்டம் நடத்தியது. அக்கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேருக்கும் வாழ்நாள் நடைவிதிப்பது பற்றி பள்ளி கல்வி முதன்மை செயலாளர் லதா ஆலோசனை நடத்தினார். டிஎன்பிஎஸ்சியில் விதித்தது போன்றே இவர்களுக்கும் வாழ்நாள் தடை விதிக்க டிஆர்பி முடிவெடுத்துள்ளது. தற்போது நடைபெற்று வரக்கூடிய பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் இவர்கள் விண்ணப்பித்திருந்தாலும், வருகின்ற மே மாதம் நடைபெறக்கூடிய  பாலிடெக்னிக்  விரிவுரையாளர் தேர்வில்,  எவ்வித காரணத்தை கொண்டும் அவர்கள் மீண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று டிஆர்பி தரப்பிலிருந்து கூறப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. இம்முடிவானது மற்ற தேர்வர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Teacher Examination Center ,Polytechnic Lecturer Examination ,Polytechnic ,Lecturer Exam Scandal , Polytechnic, lecturer, abuse, life ban, teacher, choice center, decision
× RELATED வாக்கு எண்ணிக்கை மையமான அரசு...