×

கொரோனா வைரஸ் அபாயம்: சீனாவிலிருந்து நேரடி விசா பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்ப வசதி தற்காலிக நிறுத்தம்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் அபாயம் காரணமாக, சீனாவிலிருந்து நேரடி விசா பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்ப வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வூகான் நகரில் இருந்து கரோனா வைரஸ் பரவத்தொடங்கியது. கரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.  சீனாவில் மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் கரோனா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. இந்த வைரஸ் காற்றில் பரவக்கூடியது என்பதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பானது  சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், ஒரே நாளில் 57 பேர் பலியாகி இருப்பதை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 361 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக சீனர்கள், சீனாவில் இருந்து வரும் வெளிநாட்டினருக்கு இ-விசா வசதியை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது இதுகுறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே நேற்று பயண அறிவுரைகள் வழங்கப்பட்ட நிலையில், இன்று மேலும் திருத்தியமைக்கப்பட்ட பயண அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. சீனாவுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும், 2020 ஜனவரி 15ம் தேதிமுதல் சீனாவுக்குப் பயணம் செய்தவர்களும், அண்மையில் பயணம் செய்தவர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. மேலும்,

* சீன பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கான இ-விசா வசதி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது.
* சீன நாட்டினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட இ-விசா தற்காலிகமாக செல்லாது என அறிவிக்கப்படுகிறது.
* சீனாவிலிருந்து நேரடி விசா பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் அளிப்பதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
* கட்டாயமான காரணங்களால் சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் பயணம் செய்ய வேண்டியவர்கள் பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்தை அல்லது ஷாங்காய் அல்லது குவாங்ஷூ-வில் உள்ள துணைத் தூதரகத்தைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர், என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : China India ,China , Corona virus, China, Visa, India
× RELATED தென் சீன கடலுக்கு பயணம்: 3 இந்திய போர் கப்பல்கள் சிங்கப்பூர் சென்றடைந்தன