×

ராணிப்பேட்டை - சிப்காட் பகுதியில் சாலையோரம் கொட்டும் குப்பையை அகற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

ராணிப்பேட்டை:  ராணிப்பேட்டை சிப்காட் சாலை ஓரங்களில் குவியல் குவியலாக கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பகுதியில் சாலை ஓரங்களில் தோல், இறைச்சி கழிவுகள் போன்ற குப்பைகளை குவியல், குவியலாக கொட்டுகின்றனர்.

அவ்வாறு கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, குப்பைகளை கொட்டும் தொழிற்சாலைகள் மீது சம்பந்தப்பட்ட மாவட்ட சுற்றுச் சூழல் அதிகாரிகள் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Ranipet - Chipkat , Ranipet - Chipcot, Garbage
× RELATED கறம்பக்குடி அருகே சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை