×

உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த புதிய சிகிச்சை : தாய்லாந்து மருத்துவர்கள் கண்டுபிடிப்பு

பெய்ஜிங் : உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த புதிய சிகிச்சையை தாய்லாந்து மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். எச்ஐவி மற்றும் காய்ச்சலுக்கான மருந்துகளை சரி விகிதத்தில் பயன்படுத்தி கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை குணப்படுத்த முடியும் என்று தாய்லாந்து மருத்துவர்கள் நிரூபித்துள்ளனர். நோய் முற்றிய நிலையில் இருந்தவர்களுக்கு கூட இந்த சிகிச்சையால் 48 மணி நேரத்தில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண முடிகிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.தாய்லாந்தில் கரோனா வைரஸ் பாதித்த எட்டு பேரை, இதன் மூலம் குணப்படுத்தி வீட்டிற்கு அனுப்பிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தாய்லாந்து மருத்துவர் கிரியன்ஸ்கா,மெர்ஸ் கொள்ளை நோயை குணப்படுத்த சீனா பயன்படுத்திய மருந்தையும்.எச்ஐவி மருந்தையும் சரிவிகிதத்தில் பயன்படுத்தினோம்.இந்த சிகிச்சை முறையை பயன்படுத்திய 48 மணி நேரத்தில் நோயாளிகளுக்கு நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு அறவே இல்லை, என்றார்.எனினும் உலகம் முழுவதும் அனைவருக்கும் இந்த சிகிச்சை முறையை பரிந்துரைப்பது குறித்து அவசரம் காட்ட முடியாது என்று தாய்லாந்து  மருத்துவர்கள் கூறியுள்ளனர்.இது குறித்து தாய்லாந்து  சுகாதாரத் துறை இன்று கூடி முக்கிய முடிவை அறிவிக்கிறது. கரோனா வைரஸ் தொற்றை சரிசெய்ய தாய்லாந்து மருத்துவர்கள் சிகிச்சை முறையை கண்டறிந்தது உலகம் முழுவதும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டிப்படைக்கும் கரோனா வைரஸ்

சீனாவின் ஹூபெ மாகாணத்திலுள்ள வுகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது. கரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதுசீனாவில் வூகான் நகரத்தில் வெடித்த கரோனா தாக்குதல் படிப்படியாக 31 நகரங்களுக்கு பரவி இருக்கிறது. நிமோனியா காய்ச்சலால் ஹூபே மாநிலத்தில் தான் அதிக உயிரிழப்புகள் பதிவாகி வருகிறது. ஞாயிறன்று மட்டும் சீனாவில் 57 மரணங்கள் பதிவாகி உள்ளன. அதில் 56 பேர் ஹூபே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையில் ஒரே நாளில் அந்த மாநிலத்தில் 2,830 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 15,205 ஆக அதிகரித்துள்ளது.


Tags : doctors ,Thai , Kills, rise, china, corona, virus, hoopay, wukan, thailand, doctors, treatment
× RELATED இரண்டாம் உலகப் போரின்போது சியாம்...