×

கரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஹூபே மாநிலத்தில் ஒரே நாளில் 57 பேர் உயிரிழப்பு : பலி எண்ணிக்கை 361 ஆக உயர்வு

பெய்ஜிங் : சீனாவில் தீவிரமாக பரவி வரும் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரே நாளில் 57 பேர் பலியாகி இருப்பதை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 361 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வூகான் நகரில் இருந்து கரோனா வைரஸ் பரவத்தொடங்கியது. கரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.  சீனாவில் மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் கரோனா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. இந்த வைரஸ் காற்றில் பரவக்கூடியது என்பதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பானது  சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சீனாவில் வூகான் நகரத்தில் வெடித்த கரோனா தாக்குதல் படிப்படியாக 31 நகரங்களுக்கு பரவி இருக்கிறது. நிமோனியா காய்ச்சலால் ஹூபே மாநிலத்தில் தான் அதிக உயிரிழப்புகள் பதிவாகி வருகிறது. ஞாயிறன்று மட்டும் சீனாவில் 57 மரணங்கள் பதிவாகி உள்ளன. அதில் 56 பேர் ஹூபே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையில் ஒரே நாளில் அந்த மாநிலத்தில் 2,830 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 15,205 ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்கும் 2,300 பேரின் உடல்நிலை மோசமடைந்து இருப்பதால்
பலி எண்ணிக்கை கூடும் அதிகரிக்கக் கூடும் என்று மருத்துவர்கள் அஞ்சுகின்றனர். கரோனா தாக்குதல் அறிகுறிகளுடன் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனைக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் கரோனா தாக்கியவர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்காக போர்ககால அடிப்படையில் வூகானில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட மருத்துவமனை ஓரிரு நாளில் திறக்கப்பட இருக்கிறது.  


Tags : deaths ,province ,state ,Ho Chi Minh ,coronavirus attack , Kill, rise, china, corona, virus, hooey, wukan
× RELATED உலகின் மிக வயதான ஒட்டிபிறந்த இரட்டை சகோதரிகள் மரணம்..!!