×

கிராமத்தை உலுக்கிய சோகம்; ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே காணாமல் போன சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

ஸ்ரீவில்லிப்புத்தூர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே காணாமல் போன சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூர் வேண்டுராயபுரத்தில் தனது சகோதரியுடன் ஆடு மேய்க்கச் சென்று காணாமல் போன சிறுமி வசந்த்குருலட்சுமி (9) கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வேண்டுராயபுரத்தை கிராமத்தை சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவி அவரது சகோதரியுடன் ஆடு மேய்க்கச் சென்ற போது மாயமாகியுள்ளார். இது தொடர்பாக மல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்து நாட்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அவரது உறவினர்களின் குற்றச்சாட்டு.

காணாமல் போன மாணவியை கண்டுபிடித்து தரக்கோரி சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் போராட்டம் நடத்தினர். கடந்த மாதம் சிவகாசி அருகே கொங்கராபுரத்தை சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவி வடமாநில இளைஞர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்நிலையில் தற்போது ஒரு மாணவி மாயமானது கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை உடனடியாக கண்டுப்பிடித்து ஒப்படைக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இன்று காலையில் காணாமல் போன சிறுமி வசந்த்குருலட்சுமி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் சோதனை விசாரணை நடத்தி வருகிறது.

Tags : village ,Body ,Srivilliputhur Srivilliputhur , Srivilliputhur, missing girl found dead, Vasant kurulatcumi, villagers tragedy
× RELATED திருக்கழுக்குன்றம் அருகே சோகம்: தந்தை, மகன் தூக்கிட்டு தற்கொலை