×

உலக நாடுகளுக்கு யோகாவை கொண்டு சென்றது இந்தியா: வெங்கையா நாயுடு புகழாரம்

ஹுப்பள்ளி: பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் இன்று உலகம் முழுவதும் யோகா சர்வதேச தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனால் சர்வதேச அளவில் யோகா பயிற்சியை கொண்டு சென்ற பெருமை இந்தியாவையே சாரும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு புகழாரம் சூட்டினார். கர்நாடகா மாநிலம் ஹுப்பள்ளி ரயில்வே மைதானத்தில் யோகா சிகிச்சை மற்றும் யோகா பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு பேசியதாவது: நாள்தோறும் யோகா பயிற்சி மேற்கொண்டால் உடலை நல்ல ஆரோக்யத்துடன் வைத்துக்கொள்ள முடியும். யோகா குரு பாபா ராம்தேவ் நாட்டின் மூலை முடுக்குகளுக்கு சென்று யோகா பயிற்சி அளித்து வருகிறார். அதனால்தான் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாபா ராம்தேவை குரு என்றே அழைக்கிறோம்.

யோகா பயிற்சி மேற்கொள்வதால் மனிதர்கள் மனிதநேயத்தை அடைகின்றனர். பிரதமர் நரேந்திரமோடியின் முயற்சியால் உலகம் முழுவதும் யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. கோஸ்டாரிகா நாட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு பள்ளிக்கூடங்களில் யோகா பயிற்சி கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது. விளம்பரம் இல்லாமலேயே இந்தியாவில் புகழ்பெற்ற யோகா சர்வதேச நாடுகளில் பரவியுள்ளது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையை சேர்த்துள்ளது. இதுவரை இந்தியா எந்த நாட்டின் மீதும் வலுக்கட்டாயமாக தாக்குதல் நடத்த முயன்றதில்லை. இந்தியா இந்து தர்மத்தை சார்ந்ததாக மட்டும் இன்றி, நல்லொழுக்கத்தை கடைபிடிக்கும் நாடாகவும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : world countries ,Venkaiah Naidu ,India , World Country, Yoga, India, Venkaiah Naidu, Praise
× RELATED கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவ...