×

சென்னை மாநகராட்சி சார்பில் நடந்த பிளாக்கத்தானில் 3 ஆயிரம் பேர் பங்கேற்பு: ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் பெசன்ட் நகர் கடற்கரையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பிளாக்கத்தான் ஓட்டம் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தூய்மையான சென்னையை உருவாக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் இணைந்து நேற்று பெசன்ட் நகர் கடற்கரையில் பிளாக்கத்தான் என்ற நிகழ்ச்சியை நடத்தின. நடைபயிற்சி மேற்கொண்டே குப்பைகளை சேகரிக்கும் இந்த நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பெசன்ட் கடற்கரை முதல் திருவான்மியூர் வரை 5 கி.மீ. நீளத்துக்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், சென்னை மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டு குப்பைகளை சேகரித்தனர். இதில் கலந்து கொண்டவர்களின் வசதிக்காக இரண்டு சிறப்பு மருத்துவக் குழுக்கள், நான்கு 108 ஆம்புலன்ஸ், ஒவ்வொரு 750மீ இடைவெளியிலும் தேவையான குடிநீர், உடற்பயிற்சி நிபுணர்களின் உதவி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மேலும் இந்நிகழ்ச்சி ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதாக அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் அறிவித்தனர் இந்நிகழ்ச்சியில், துணை ஆணையர்கள் குமாரவேல் பாண்டியன், மதுசுதன் ரெட்டி, தெற்கு வட்டார துணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஷ், அடையாறு காவல் துணை ஆணையர் பகலவன், தலைமை பொறியாளர் மகேசன், மாநகர நல அலுவலர் ஜெகதிசன், எச்டிஎப்சி வங்கி, டம்பெல் நிறுவனம் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags : Planned Parenthood ,Chennai Municipal Corporation , Chennai Corporation, Blockchain, 3 thousand people, Participation: Asian Adventure, Book, Place
× RELATED சென்னை மாநகராட்சியில் 2023-24...