×

எஸ்எஸ்ஐ கொலை வழக்கு என்ஐஏக்கு மாற்றம்: தீவிரவாதிகளை வெளி மாநிலங்களுக்கு அழைத்து செல்ல முடிவு

நாகர்கோவில்: களியக்காவிளையில் நடந்த எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு, என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் சோதனை சாவடியில் கடந்த மாதம் 8ம் தேதி இரவு பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ. வில்சனை (57) சுட்டு கொன்ற வழக்கில் கைதாகி உள்ள தீவிரவாதிகள் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரையும் கடந்த 21ம் தேதி முதல் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். 10 நாட்கள் போலீஸ் காவல் விசாரணை முடிந்ததை தொடர்ந்து கடந்த 31ம் தேதி, நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

,இவர்களுக்கு பெங்களூர், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட இடங்களில் கைதாகி உள்ள பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை, பெங்களூரில் கைதாகி உள்ள இஜாஜ் பாட்சாவிடம் இருந்து வாங்கியது தெரிய வந்தது. மேலும் ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் கைதாகி இருப்பவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வில்சன் கொலைக்கு உதவி செய்துள்ள தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அந்த வகையில் இந்த வழக்கில் சுமார் 22 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் அப்துல் சமீம், தவுபீக் உள்பட 7 பேர் நேரடி தொடர்பு உடையவர்கள் ஆவர். இவர்கள் எந்தெந்த வகையில் உதவி செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்களை தவுபிக் மற்றும் அப்துல் சமீம் வாக்குமூலம் மூலம் உறுதிப்படுத்தி உள்ளனர்.

இந்தநிலையில் டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாதிகள் கைதான வழக்குகள் அனைத்தும் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தான் இருந்து வருகிறது. எனவே எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கும் என்.ஐ.ஏ.வுக்கு நேற்று முன்தினம் மாற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக குமரி மாவட்ட எஸ்.பி. நாத் கூறுகையில், எந்த சமயத்திலும் எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணையை தொடங்க வாய்ப்பு உள்ளது என்றார்.

Tags : states ,NIA ,SSI ,extremists , SSI, murder case, NIA, change, extremist
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!