×

ஓசூரில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்தவர் மன்சூர் அலி(49). ரியல் எஸ்டேட் அதிபர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சிறுபான்மை அணி துணை அமைப்பாளர். நேற்றிரவு 7 மணியளவில் ஓசூர் காமராஜ் காலனி விளையாட்டு மைதானத்தில் அமர்ந்திருந்தார். அப்போது, 2 பைக்கில் வந்த 5 பேர் கும்பல் மன்சூர் அலியை அரிவாளால் வெட்டி கொன்று தப்பியது. ஏற்கனவே 2014 ஜூன் மாதம் இவரையும் ஜான்பாஷா என்பவரையும் ஒரு கும்பல் காரில் கடத்தி ஜான்பாஷா குடும்பத்தினரிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியது. போலீசார் சுற்றி வளைத்ததால் இருவரையும் கத்தியால் குத்தி விட்டு கும்பல் தப்பியது. இதில் ஜான்பாஷா இறந்தார். அப்போது தப்பிய மன்சூர் அலி தற்போது கொலை செய்யப்பட்டுள்ளார்.

Tags : Vettikolai Hosur ,DMK ,Hosur , In Hosur, DMK, Vettikolai
× RELATED ஓசூரில் ஊரடங்கால் போக்குவரத்து...