×

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி: காய்ச்சல், மூச்சுத்திணறல்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நேற்று காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி (73), டெல்லியில் வசித்து வருகிறார். அவருக்கு நேற்று காலை முதல் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று மாலை 7 மணிக்கு அங்குள்ள கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.


Tags : Sonia Gandhi , Sonia Gandhi, hospital, clearance, fever, suffocation
× RELATED இந்தியாவின் ஜனநாயகத்தின்...